சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை, வெள்ள பாதிப்பு முன் எச்சரிக்கை பணிகளை கண்காணிக்க, மண்டலம் வாரியாக 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை பணிகள்... ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் - ஐஏஎஸ் அலுவலர்கள்
சென்னை: வடகிழக்கு பருவமழை, வெள்ள பாதிப்பு முன் எச்சரிக்கை பணிகளை கண்காணிக்க, மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சியில் 15 ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை
அதன்படி, சென்னை மாநகராட்சியில் வட கிழக்கு பருவமழை, வெள்ள பாதிப்பு முன் எச்சரிக்கை பணிகளை கண்காணிக்கவும், மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் உடனடியாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக மண்டலம் வாரியாக சந்தீப் நந்தூரி, ஏ.கே. கமல் கிஷோர், டிஜி வினய் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.