தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தமிழ்நாடு அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட உள்ள இயற்கை பேரிடர்கள், பிற பாதிப்புகளில் காவல்துறையினரின் பங்கு குறித்து காவல்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம் இந்த ஆய்வுக் கூட்டத்தில், சென்னையில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் பொதுமக்களை பாதுகாப்பது, போக்குவரத்து பாதிப்புகளை சீரமைப்பது, அதற்காக காவல்துறையினர் பிற அலுவலர்களுடன் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பது பற்றி புரிந்துணர்வு மற்றும் அலுவலர்கள் மட்டத்தில் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கி பாதிப்புகளை எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காவல்துறை ஆணையர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழை - ஆய்வுப் பணிகளுக்காக ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம்