தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தமிழ்நாடு அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் மூத்த ஐஏஎஸ் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு ஹர்மிந்தர் சிங், கடலூருக்கு ககன்தீப்சிங் பேடி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பீலா ராஜேஷ், புதுக்கோட்டைக்கு ஷாம்பு கல்லோலிகர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் இந்த மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் இணைந்து மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.