தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லாவரம் அருகே 1000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் - thousands of north indians protest in pallavaram

சென்னை: பல்லாவரம் அருகே 1000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

north indians protest in pallavaram to take them home
north indians protest in pallavaram to take them home

By

Published : May 18, 2020, 11:43 AM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிந்துவரும் வடமாநில தொழிலாளர்களை தொடர்ந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்ற்றுவருகின்றன.

சில இடங்களில் வடமாநிலத்தவர்கள், அவ்வப்போது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுமாறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேனியில் 1000க்கும் மேற்பட்ட பிகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தனியார் கட்டடக் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

வட மாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்

இவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு நாகல்கேனியிலிருந்து திருநீர்மலை செல்லும் சாலையில் 'வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்' என்னும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சங்கர் நகர் காவல் துறையினர் விரைந்து வந்து வடமாநிலத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க...ஒரே நாளில் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய 2.39 லட்சம் பேர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details