கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தினசரி தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மாநகரமே முடங்கியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் கவுல் பஜார் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கி வேலைப்பார்த்து வந்தனர்.
இந்நிலையில், ஊரடங்கால் வேலை இல்லாமல் சாப்பாட்டுக்கும் வழி இல்லாமல் இருக்கும் தங்களை, தங்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொழிச்சலூர் கவுல் பஜார் பகுதியில் சுமார் ஆயிரித்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.