தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத்தவர்கள் - tamil latest news

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத்தவர்கள்
சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத்தவர்கள்

By

Published : May 9, 2020, 12:40 PM IST

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகளிலும், கடைகளிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத்தவர்கள்

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் சதானத்தபுரம் செல்லும் வழியில் தனியார் கட்டட கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 1000க்கு மேற்பட்டவர்கள் ஆலப்பாக்கத்தில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

அந்தத் தனியார் நிறுவனத்தினர் ஆதார் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு அனுப்ப காலதாமதம் செய்ததால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருங்களத்தூரிலிருந்து மதுரவாயல் செல்லும் புறவழிச்சாலையில் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர் இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

கோவையில் பணிபுரிந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களில் 22,000 பேர் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அவர்களது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தனர். அதனடிப்படையில் இந்த வாரம் முழுவதும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத்தவர்கள்

இதில் பொள்ளாச்சி பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வருவாய் துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வடமாநில தொழிலாளர்களுக்கு வாகன ஏற்பாடு செய்து, அவர்களின் முழு விவரங்களையும் பதிவு செய்து பின்னர் அவர்களுக்கு தேவையான குடிநீர், முகக்கவசம் வழங்கி அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசு -டிடிவி தினகரன் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details