சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் பைகளில் உள்ள நகைகள் திருடுபோவதாக ரயில்வே காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இப்புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை வலைவீசித் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் நடைமேடை எண் 15இல் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த ஐந்து பேரை ரயில்வே காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ராஜேந்திர குமார் (46), மதன்லால் (38), ராம்தியா (40), சுனில் குமார் (34), சுரேஷ் குமார் (39) என்பதும், இவர்கள் ரயில் பயணிகளின் பைகளில் உள்ள நகைகளைக் கொள்ளையடிக்கும் கும்பல் என்பதும் தெரியவந்தது.