ஒடிசாவை சேர்ந்தவர் கானு பெஹேரா (24) இவர், குஜராத்தை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிறுவனம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஐஐடி வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்தம் பெற்று, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பெஹேரா தரமணியில் தங்கி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச். 11) கட்டுமானப்பணியில் ஈடுபடடிருந்த போது, மூன்றாவது மாடியிலிருந்து இருந்து தவறி விழுந்து பெஹேரா உயிரிழந்தார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு - north indian worker death in iit
சென்னை: ஐஐடி வளாகத்தில் கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வட மாநிலத்தொழிலாளி, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
north indian worker death in iit madras
இதையும் படிங்க:காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்பு!