தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் - north chennai eb workers protest

வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
மின்வாரிய ஊழியர்கள்

By

Published : Aug 9, 2021, 10:17 PM IST

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலைய வாயிலில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், மின்சார சட்டத்திருத்த மசோதா 2021ஐ கைவிட வேண்டும், மின் துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும், இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக் கூடாது, கேரள அரசை போல தமிழ்நாடு அரசும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்

மேலும், மத்திய அரசை கண்டித்து நாளை(ஆகஸ்ட்.10) மின்வாரிய ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ரூ.39 ஆயிரம் கோடி மறைமுக கடன் வாங்கப்பட்டது ஏன்? பிடிஆர் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details