வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யதர்ஷினி வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளை சார்ந்தவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 23 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு!
சென்னை: வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 23 பேருக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுயேச்சையாக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் சந்தானம் கிருஷ்ணனுக்கு பரிசு பெட்டி சின்னமும், அருள்முருகன் பலூன், கணேஷ் வைரம், சதீஷ் கண்ணன் சோபா, சரவணன் மடிக்கணினி, சீனிவாசன் குளிர்சாதன பெட்டி, செல்வராஜ் குக்கர், தன்ராஜ் பானை, தரணிதரன் சூட்கேஸ், தாமோதரன் மின் கம்பம், பிரித்திவிராஜ் பக்கெட், மாரிமுத்து மரப்பெட்டி, ராஜ் தொப்பி ஆகிய சின்னங்கள் அகர வரிசைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன.
ஆர் கே நகர் தொகுதியில் டிடி வி தினகரன் போட்டியிட்டு வெற்றிபெற்ற சின்னத்தை நாடாளுமன்றத் தேர்தலில் சரவணன் என்ற சுயேச்சை பெற்றுள்ளார்.