சென்னையில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை கண்டறிய சென்னை மாநகராட்சி சார்பில் நகர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். இது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், கடந்த மூன்று நாள்களாக கரோனா தொற்று உள்ளதா என சென்னை மாநகர பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் 435 பேருக்கு சாதாரண பாதிப்புகள் மற்றும் இருமல் உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மாநகராட்சி சார்பில் நடந்துவருகிறது. மேலும் மேற்படி பாதிப்புகள் இருப்பவர்களுக்கு தற்போதுள்ள பாதிப்புகளை தாண்டி அதிகபட்சமான பாதிப்புகள் ஏதும் இருக்கும் பட்சத்தில் அவர்களை உரிய நேரத்தில் அவர்கள் வீடுகளிலிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்