சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கி வரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பள்ளி சத்துணவு மையங்களுக்குச் சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக Eggs -முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
கரோனா ஊரடங்கால் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள், குழந்தைகளுக்கு உலர் பொருள்களாக அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில இடங்களில் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் தரமாக உள்ளதா எனப் பரிசோதித்து வழங்க வேண்டும். மேலும், முட்டை டெண்டர் எடுத்தவர்கள் பள்ளிகளுக்கு வழங்கும் முட்டைகளைத் தரமானதாக வழங்க வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
புதிய முட்டைகள் பெறுவதற்காக தனியாக வைக்கப்படும் நிலை
இந்நிலையில், அரசின் சார்பில் சமூக நலத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’முட்டை விநியோகஸ்தர்கள் மூலம் பள்ளி சத்துணவு மையங்களுக்கு வாரம் ஒரு முறை முட்டைகள் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு முட்டைகள் விநியோகம் செய்யப்படும்போது, முட்டைகளின் தரம், அளவு மற்றும் எடையினை நன்கு பரிசோதித்து, நல்ல நிலையில் உள்ள முட்டைகளையே மைய பொறுப்பாளர்கள் பெறுகின்றனர்.
பெறப்படும் சமயத்திலோ அல்லது ஒரு வாரக் காலத்திற்குள்ளாகவோ பெறப்பட்ட முட்டைகளில் ஓட்டையோ / விரிசலோ அல்லது புழுக்களோ இருந்தது கண்டறியப்பட்டால், அந்த முட்டைகள் மற்றும் அந்த முட்டை இருந்த அட்டை தனியாக வைக்கப்படுகிறது. ஏனெனில் , முட்டை விநியோகஸ்தர்களிடமிருந்து உடைந்த அல்லது புழுக்கள் உள்ள முட்டைகளுக்கு மாற்றாக புதிய முட்டைகள் பெறுவதற்காக அவை தனியாக வைக்கப்படுகின்றன.
உண்மைக்குப் புறம்பான செய்தி