தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிடவுள்ள கட்சி சார்பற்ற விவசாய சங்கம் - ஏர்முனை இளைஞர் அணி

கோவை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் அறிவித்துள்ளனர்.

Non-Partisan Agricultural Association to blockade Chennai Passport Office
Non-Partisan Agricultural Association to blockade Chennai Passport Office

By

Published : Dec 11, 2020, 6:57 PM IST

கோவை அவிநாசி சாலையில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் மருத்துவர் தங்கராஜ் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 36ஆவது நினைவு அஞ்சலி திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் 2020 மின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெருமாநல்லூரில் இருந்து சென்னையை நோக்கி பேரணி நடைபெறும்.

இந்த பேரணி இறுதியாக சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிறைவடைந்ததும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

கட்சி சார்பற்ற விவசாய சங்கம்

தென்னிந்தியாவில் தற்போது வேளாண் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிய வந்துள்ளது. கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் விவசாயிகள் போராட்டத்தை துவங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் வலுக்கும் எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details