சென்னை:மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில், ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை ஒலி மாசுபாடு எதிர்ப்பு பேரணியை நடத்தப்பட்டது. இதுமட்டுமல்லாமல், அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை வைத்திருந்தோர் மீது 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 281 வழக்குகளில் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே சென்னை மாநகர போலீசார் உதவியுடன் தனியார் தொண்டு நிறுவனம் மாநகரில் பல்வேறு இடங்களில் ஒலி மாசுபாடு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், சென்னை மாநகராட்சியில் இயல்பை காட்டிலும் 30 டெசிபல் விழுக்காடு ஒலி மாசுபாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.