தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு - NO SPL Train For TamilNadu

சென்னை: தமிழ்நாட்டில் வருகின்ற திங்கள் கிழமை முதல் ஜூலை 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

rail
rail

By

Published : Jun 27, 2020, 9:11 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கரோனா தொற்று அதிதீவிரமாகப் பரவிவரும் நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. இந்நிலையில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வருகின்ற 29ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்த பயணிகளின் முழுத்தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுக்கான தொகை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதில், மதுரை - விழுப்புரம், கோயம்புத்தூர் - அரக்கோணம், கோயம்புத்தூர் - மயிலாடுதுறை, கோயம்புத்தூர் -காட்பாடி, திருச்சி நாகர்கோவில், திருச்சி செங்கல்பட்டு ஆகிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:கரோனாவால் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மரணம்: நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details