தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த்தொற்று காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
பாஜக கூட்டத்தில் கேள்விக்குறியான தகுந்த இடைவெளி! இந்நிலையில் இன்று (ஜூலை 23) சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் முருகன் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பல திரைப்படத் துறையினர் பாஜகவில் இணைந்தனர்.
அப்போது கந்த சஷ்டி கவசத்தின் பெருமைகளை உணர்த்தும் வகையில் பாடல் ஒன்றை பாஜக தலைவர் முருகன் வெளியிட்டார். இதில் மாநில துணை தலைவர் வி.பி. சாமி, பாஜக மூத்த நிர்வாகி இல. கணேசன், பாஜக நிர்வாகிகள் நடிகை நமீதா, காயத்ரி பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என கூட்டமாக கூடியிருந்தனர். இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க...'என் 63 வருட சர்வீஸில் இப்படியொரு மோசமான நிலையை எதிர்கொண்டதில்லை' சிவப்புச் சட்டைக்காரர்களின் வேதனைப் பதிவு