தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா குறைந்த மாவட்டங்களுக்குத் தளர்வுகள்: முதலமைச்சரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை - carona updates

கரோனா குறைந்த மாவட்டங்களுக்குத் தளர்வுகள்: முதலமைச்சரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை
கரோனா குறைந்த மாவட்டங்களுக்குத் தளர்வுகள்: முதலமைச்சரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

By

Published : Jun 19, 2021, 1:11 PM IST

Updated : Jun 19, 2021, 3:25 PM IST

12:59 June 19

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் கடந்த மே 7ஆம் தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கரோனா தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தது. கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 36ஆயிரத்தைக் கடந்தது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சிறு தளர்வுகளுடன் ஊரடங்கு மே 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கரோனா தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகளவில் இருந்ததன் காரணமாக, அந்த 11 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளுடன் வரும் 21ஆம் தேதிவரை 4ஆவது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கோவையைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது; தொற்று உறுதி விகிதம் 5%க்கும் கீழ் குறைந்த நிலையில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கடந்த மாதம் 27%ஆக இருந்த சென்னையின் தொற்று விதிதம் 1.68%ஆக குறைந்துள்ளது.
வரும் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 5ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

கூடுதல் தளர்வுகளுக்கான வாய்ப்புகள்:

- கடைகள் இயங்க கூடுதல் நேரம் அறிவிக்க வாய்ப்பு

- திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் உறவினர்கள் பங்கேற்பதில் உள்ள எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

- சிறிய கோயில்கள் மற்றும் பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி வழங்க வாய்ப்பு

 - 50% நகரப்பேருந்துகள் இயக்க வாய்ப்பு

 - பெரிய கடைகளை குளிர்சாதன வசதி இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி

 - நூலகம்,அருங்காட்சியகத்தை திறக்க வாய்ப்பு

 - 11 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது போன்றவைப் பற்றி ஆலோசிக்கப்பட்டு, அதை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Last Updated : Jun 19, 2021, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details