தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏசி, கார் இருந்தால் குடும்ப அட்டை சலுகை ரத்து! - luxury item holder

சென்னை: "ஏசி, கான்கிரீட் வீடு, கார் உள்ளிட்ட 10 அம்சங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும்" என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

smart card

By

Published : Jul 18, 2019, 11:58 AM IST

Updated : Jul 18, 2019, 5:28 PM IST

தமிழ்நாடு முழுவதும் வசதி படைத்தவர்கள், மானியத்தில் பொருட்கள் வழங்கும் குடும்ப அட்டைகளை பயன்படுத்துவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி போலி அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் புழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. இதில் ஏசி உள்ளிட்ட 10 அம்சங்களில் ஏதேனும் ஒன்று வைத்திருந்தால் முன்னுரிமை குடும்ப அட்டைக்கான சலுகை பறிக்கப்படவுள்ளது.

ஸ்மார்ட் கார்டு ஸ்வைப் இயந்திரம்

அதன்படி, முன்னுரிமைப் பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்கான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிகள் பின்வருமாறு:

வருமானவரிச் செலுத்தும் நபரில் குறைந்தது ஒரு உறுப்பினரைக் கொண்ட குடும்பம், தொழில் வரி செலுத்துவோரை உறுப்பினராக கொண்ட குடும்பம், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள், ஏசி - கார் வைத்திருப்போர், கான்கிரீட் வீடு வைத்திருப்போர், மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்றவரை உறுப்பினராக கொண்ட குடும்பம், வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பத்தினருக்கு சலுகை நிறுத்தப்படும்.

அரசின் விதிப்படி மேற்கூறியவற்றில் பத்தில் ஏதாவது ஒன்று இருந்தாலும், இந்த குடும்பங்கள் மானியம் பெற தகுதி இல்லாததாக கணக்கிடப்படுகிறது. இந்த குடும்பங்கள் முன்னுரிமை பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் பயன்படுத்தினால் தற்போது அது மாற்றப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Last Updated : Jul 18, 2019, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details