தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் திருநங்கைகள் கொலை பற்றி பேச யாரும் இல்லை: திருநங்கை கிருபா

சென்னை: பல ஆயிரம் ஆண்டு முன்னர் எழுதிய மனுதர்ம நூலை பற்றி அரசியல் வாதிகள் இப்போ பேசுகின்றனர். ஆனால் திருநங்கைகள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவது பற்றி பேசுவதற்கு யாரும் இல்லை என தமிழ்நாடு திருநங்கை அமைப்பின் கிருபா தெரிவித்துள்ளார்.

no one is talking about the murders of transgender people
no one is talking about the murders of transgender people

By

Published : Oct 28, 2020, 6:07 PM IST

Updated : Oct 28, 2020, 6:41 PM IST

தொடர் திருநங்கை படுகொலையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு திருநங்கை அமைப்பு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது திருநங்கை கிருபா கூறுகையில், '' தமிழ்நாட்டில் தொடர்ந்து திருநங்கைகள் கொலை நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். இதுதவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே ஒரு பெண் அல்லது ஆணுக்கு நடந்தால், மாதர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கேட்கிறது. எங்களுக்கு குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திருநங்கை படுகொலைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 3500 வருடங்களுக்கு முன்னர் எழுதிய மனுதர்ம நூலை பற்றி அரசியல்வாதிகள் இப்போது பேசுகின்றனர். ஆனால் 3 மாத முன் நடந்த கொலை பற்றி பேச யாரும் இல்லை.

திருநங்கைகள் செய்தியாளர் சந்திப்பு

தற்போது பல இடைகளில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அதே உடைகள் அணியும் எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்த திருநங்கை கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் வழக்கு தொடுக்க அவர்களது குடும்பம் உள்ளது. எங்களுக்கு மூத்த திருநங்கைகள் மட்டுமே இருக்கின்றனர். திருநங்கை கொலை செய்யப்பட்டால் காவல் துறை தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்யவேண்டும். இதுதொடர்பாக நாளை முதலமைச்சரை சந்தித்து இதுபற்றி மனு கொடுக்க உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: ஓபிசி பிரிவுக்கு இட ஒதுக்கீடு கிடையாது!

Last Updated : Oct 28, 2020, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details