தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"முத்துநகர் படுகொலை" குறும்படத்தை வெளியிடுவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது - உயர் நீதிமன்றம் - High Court

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள "முத்துநகர் படுகொலை" குறும்படத்தை வெளியிடுவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"முத்துநகர் படுகொலை" குறும்படத்தை வெளியிடுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது - உயர் நீதிமன்றம்
"முத்துநகர் படுகொலை" குறும்படத்தை வெளியிடுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது - உயர் நீதிமன்றம்

By

Published : May 12, 2022, 10:28 PM IST

சென்னை : தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆகியவை நடைபெற்று வரும் நிலையில் அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு "முத்துநகர் படுகொலை" என்ற தலைப்பில் குறும்படம் தயாரித்து வெளியிடப்பட உள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், “ சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இது போன்ற குறும்படம் வெளியிட்டால் விசாரணையில் தொய்வு ஏற்படும். எனவே குறும்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் காவல் துறை ஆகியவற்றிற்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த தேதியை முன்னிட்டு வரும் 20 அல்லது 22ஆம் தேதியன்று குறும்படம் வெளியிடப்படலாம் என்பதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

"முத்துநகர் படுகொலை" குறும்படத்தை வெளியிடுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது - உயர் நீதிமன்றம்
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தப் படம் வருவதால் யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. வேண்டுமென்றால் படத்தை எதிர்ப்பவர்கள் பார்க்காமல் இருந்துகொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவித்ததை ஏற்ற நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details