சென்னை : மதுரவாயில் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் 2 கோடி மதிப்பில் புதிதாக 300 எல்.இ.டி தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது மதுரவாயல் தொகுதி சார்பில் வெள்ள நிவாரணத் தொகையாக 10 லட்ச ரூபாயை எம்.எல்.ஏ காரபாக்கம் கணபதி அமைச்சரிடம் வழங்கினார்.
ஒமைக்ரான் வைரஸ்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஒமைக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை உணடாக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
தீவிர கண்காணிப்பு
ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் முழு கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார். ஆபத்தான நிலை என கருத்தப்படம் நாடுகளில் இருந்து வந்துள்ள 130 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியன் விமான நிலையங்களில் ஆய்வு
அதேபோல் திருச்சி, மதுரை,கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாகவும், மழை காரணமாக சற்று தாமதமாகி வருவதாக மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க :மாரியாத்தா சொல்றேன் ஊசி வேணாம் - செவிலியரை சாமி ஆடி துரத்திய மூதாட்டி