நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பகுதிகளில் கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல், முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
மேற்காணும் பகுதிகளில் வருகிற ஜூலை 6ஆம் தேதி முதல் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படவும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதித்து ஜூன் 30ஆம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.