தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி டிரங்க் அன்ட் டிரைவ் மட்டுமல்ல.. டிரங்க் அன்ட் டிராவலும்தான் - போக்குவரத்து காவல்துறை அதிரடி - new traffic rules in chennai

இனி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய போக்குவரத்து விதியை சென்னை போக்குவரத்து காவல்துறை அமல்படுத்தி உள்ளது.

இனி டிரங்க் அன்ட் டிரைவ் மட்டுமல்ல.. டிரங்க் அன்ட் டிராவலும்தான் - போக்குவரத்து காவல்துறை அதிரடி
இனி டிரங்க் அன்ட் டிரைவ் மட்டுமல்ல.. டிரங்க் அன்ட் டிராவலும்தான் - போக்குவரத்து காவல்துறை அதிரடி

By

Published : Oct 20, 2022, 7:16 AM IST

சென்னை: இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழ்நாட்டில்தான் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்தாண்டு மட்டும் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,026 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறான சாலை விபத்துகளை குறைக்கவே, போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1,178 வழக்குகள் பதிவுகள்: இதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில், தமிழ்நாட்டில் குடிபோதையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு மட்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு அவை நீதிமன்றம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தின் கீழ், கடந்தாண்டு மட்டும் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,178 வழக்குகள் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் நேற்று (அக்.19) நள்ளிரவு முதல் சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

உடன் பயணிப்பவருக்கும் அபராதம்: முக்கியமாக, குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபரிடம் மட்டுமே போக்குவரத்து காவல்துறையினர் அபராதத் தொகை விதித்தனர். ஆனால் தற்போது, வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு, இருவரிடமும் அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதேபோல் கார் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மேலும், முகம் தெரிந்த அறிமுகமான ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநருடன் பயணம் செய்யும்போது அந்த ஓட்டுநர் மதுபோதையில் இருந்தால், பின்னால் அமர்ந்து இருப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும். ஆனால் சவாரி செல்லும்போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது.

மோட்டார் வாகன சட்டம் 185 r/w 188 MV விதிப்படி, இந்த அபராதமானது வசூல் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் என தெரிந்து அவர்களுடன் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் உடன் பயணிப்பவர்கள், குடித்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுவதாக போக்குவரத்துக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆட்டோவில் விளையாடிய குழந்தையின் தந்தையை கொலை செய்ய முயற்சித்தவருக்கு சிறை தண்டனை

ABOUT THE AUTHOR

...view details