தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செலவிற்கு பணமில்லை, ஏடிஎம்மை உடைத்த மதுபிரியர் கைது!

சென்னை: ஆவடி ரயில்வே கேட் அருகே குடிபோதையில் ஏடிஎம் மையத்தை உடைத்த இளைஞரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

செலவிற்கு பணமில்லை, ஏடிஎம் உடைத்த மதுபிரியர் கைது!
செலவிற்கு பணமில்லை, ஏடிஎம் உடைத்த மதுபிரியர் கைது!

By

Published : Oct 16, 2020, 3:35 PM IST

சென்னை ஆவடி ரயில்வே ஸ்டேஷன் சாலை, கேட் அருகில் இந்தியன் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு பாதுகாப்புக்கு காவலாளி கிடையாது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி காலை இந்த மையத்தில் இருந்த இரு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இந்தியன் வங்கி கிளை அலுவலர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

அதில், இரவில் ஏடிஎம் மையத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அங்கு மக்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளை முயற்சியை பாதியில் விட்டு விட்டு அங்கிருந்து அந்த நபர் தப்பி ஓடியது தெரியவந்தது. இதனால், இந்த ஏடிஎம்யில் இருந்த சுமார் ரூ. 40 லட்சம் ரொக்கப்பணம் தப்பியது.

இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக, வங்க அலுவலர்கள் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடிவந்தனர்.

இந்நிலையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் ஆவடி பஸ் நிலையம் அருகே பிடிப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் சென்னை, பல்லவன் சாலை, கல்லறை, சிவசக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி அரிகிருஷ்ணன் (27) என்பது தெரியவந்தது.

மேலும், குடிபழக்கம் உடைய இவர், ஊரடங்கால் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். செலவுக்கு பணம் இல்லாததால், குடிபோதையில் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், இயந்திரத்தை உடைக்க முடியாததால் திரும்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details