சென்னை: இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகி வருகிறது. நாடுமுழுவதும் நாளொன்றுக்கு லட்சம்பேர் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா ஒரு நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நாளை முதல் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் - பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் - சென்னை அண்மை செய்திகள்
பெட்ரோல் நிரப்ப வருபவர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி பெட்ரோல் வழங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
no-mask-no-petrol
இந்த நிலையில் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாளை(ஏப்.10) பெட்ரோல் நிலையங்களில், முக கவசம் அணியாமல் பெட்ரோல் நிரப்ப வருகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கோயம்பேட்டில் சில்லரை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை!