தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவுச் சங்கங்களில் முறையாகத் தேர்தல் நடைபெறவில்லை - ஐ. பெரியசாமி - கூட்டுறவுச் சங்கங்கள்

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுச் சங்கங்களில் முறையாகத் தேர்தல் நடைபெறவில்லை எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி குற்றஞ்சாட்டினார்.

ஐ. பெரியசாமி
ஐ. பெரியசாமி

By

Published : Aug 25, 2021, 2:18 PM IST

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு துறையின் அமைச்சர் பதிலளித்ததோடு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளும் அமைச்சரின் பதில்களும்...

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம்

  • கூட்டுறவுச் சங்கங்களில் 22 ஆண்டுகள் புதிய உறுப்பினர்கள் பதியாமல் இருந்துவந்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி புதிய உறுப்பினர்கள் கிராமசபை கூட்டம் மூலமாகச் சேர்க்கப்பட்டார்கள்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி

  • அதிமுக ஆட்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்கள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை. 1200 சங்கங்களில் முறையாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. சுமார் 400 சங்கங்களில் முறையாகத் தேர்தல் நடக்கவில்லை, அதற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்திருந்தது.

கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

  • திமுக ஆட்சிக் காலத்தில் கூட்டுறவுத் துறை சிறப்பாகச் செயல்பட்டமைக்கு இரண்டு விருதுகள்தாம் வாங்கியுள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 28 விருதுகளை வாங்கியுள்ளோம். நீதிமன்றம் எந்தத் தேர்தலையும் ரத்துசெய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 2800-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் பெரியசாமி

  • அதிமுக 10 ஆண்டுகளில் சுமார் 3000 நியாயவிலைக் கடைகளைத்தான் திறந்துவைத்துள்ளது. ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் ஐந்து ஆண்டுகளில் சுமார் 3500-க்கும் மேற்பட்ட பகுதி, முழு நேர நியாயவிலைக் கடைகளைத் திறந்துவைத்துள்ளோம்.

இதையும் படிங்க: 'எதிர்க்கட்சிகளைப் பேசவிடுங்கள்' - அமைச்சர்களுக்கு கடிவாளம் போட்ட ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details