தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி கோரும் வழக்கு: அரசு திட்டம் வகுக்க அறிவுறுத்தல் - corona relief fund for disabled

மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Aug 12, 2021, 5:45 PM IST

சென்னை:கரோனா பரவலைத் தடுக்க, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி, மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையின்போது, மாற்றுத் திறனளிகளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக, ஒதுக்கப்பட்ட 133 கோடி ரூபாய் எப்படி செலவிடப்பட்டது என அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

இந்த வழக்கு இன்று (ஆக.12) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு

இந்த அறிக்கை குறித்து ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிவாரண உதவியைப் பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், 2021ஆம் ஆண்டு எந்த உதவியும் பெறவில்லை என்றும் வாதிட்டனர்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 25 விழுக்காடு கூடுதல் உதவியும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

திட்டம் வகுக்க அறிவுறுத்தல்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் சென்றடைந்ததாகத் தெரியவில்லை எனவும், அவர்கள் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

சமீபத்திய அறிக்கையில் இடைக்கால நடவடிக்கைகள் பற்றி மட்டும் கூறப்பட்டுள்ளதாக, குறிப்பிட்ட நீதிபதிகள், ஏற்றுக்கொள்ளத்தக்க திட்டம் ஒன்றை மாநில அரசு வகுக்க வேண்டும் எனவும்; அந்தத் திட்டம் அடுத்த விசாரணையின்போது அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்படும் எனவும் நம்புவதாகத் தெரிவித்து, விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: நடிகர் மம்முட்டியின் நிலத்தின் மீது வழக்கு - நில நிர்வாக ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details