தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தனக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டுக்கும்  எந்தத் தொடர்பும் இல்லை' - ஜெயக்குமார் மனு! - ஜெயக்குமார் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள ஜெயக்குமார் என்பவர் தனக்கும் டிஎன்பிஎஸ்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மனு தாக்கல் செய்துள்ளார்.

jayakumar petition
jayakumar petition

By

Published : Feb 6, 2020, 11:46 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2 ஏ தேர்வு மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமார் காவல் துறையினரிடம் பிடிபடாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். ஜெயக்குமார் தமிழ்நாட்டை விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்றே கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் காவல் துறையினரின் தேடுதல் வேட்டை விரிவுப்படுத்தப்பட்டது.

இச்சூழலில், சென்னை சைதாப்பேட்டை புறநகர் 23ஆம் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் இன்று சரணடைந்தார். இதையடுத்து அவரை நாளை ஒரு நாள் மட்டும் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிபதி கெளதம் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், எந்த ஆதாரமும் இல்லாமல் தன் பெயரை கெடுக்கும் நோக்கில் இந்த வழக்கில் காவல்துறை செயல்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயக்குமார்

மேலும், மக்களிடம் நன்மதிப்பைப் பெறுவதற்காக பொய் குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் தன் மீது சுமத்தியுள்ளதாகவும் ஜெயக்குமார் தனது மனுவில் கூறியுள்ளார். இதனையடுத்து நாளை ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கு: முன் பிணை கோரியுள்ள நிதித்துறை உதவியாளர்!

ABOUT THE AUTHOR

...view details