தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை, பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவ படத்தை எரித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 9, 2023, 7:15 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார்

சென்னை: பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை எனவும் ஓ பன்னீர் செல்வம் அதிமுக லோகோ, ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், "அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆட்சியில் இல்லை என்றாலும் மக்கள் பணிகளை செய்து வருகிறோம். ஆட்சியாளர்கள் மக்களுக்கு எந்தவித திட்டத்தையும் செய்யாமல் இருக்கிறார்கள். அதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

மேலும், மக்களுக்கு இந்த ஆட்சியின் மீது வெறுப்பு உள்ளது. மாவட்ட கழக செயலாளர் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு சிறப்பான கூட்டம் நடைபெற்றது. பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவ படத்தை எரித்தது ஏற்று கொள்ள முடியாதது.

பாஜகவினர் இது போன்ற செயல்களை ஊக்க படுத்தாமால் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தங்களுக்கு பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை. அது குறித்து இன்றைய கூட்டத்தில் எதுவும் விவாதிக்க வில்லை.

இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி தொடர்ந்து இருக்கிறது. அம்மா போன்று யாரும் பிறக்க முடியாது. எங்கள் தலைவருக்கு (ஜெயலலிதா) நிகரானவர்கள் எங்கும் கிடையாது. ஓ பன்னீர் செல்வம் கட்சியை நடத்தவில்லை, அவர் ஒரு கடையை நடத்தி வருகிறார். 99 விழுக்காடு நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டு ஒருமித்த கருத்துடன் பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைபாடு. ஆளுநரின் சந்தேகங்களை தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. விடியாத திமுக அரசு அவசர கோணத்தில் விளக்கங்களை அனுப்பி உள்ளது. மாநில அதிகாரத்திற்கு உட்பட்டு தான் இந்த தடை மசோதா இயற்றப்பட்டுள்ளது என ஆளுநருக்கு அளித்த விளக்கத்தில் திமுக ஏன் தெளிவு படுத்தவில்லை.

அதிமுகவை பொறுத்த வரை ஆன்லைன் சூதாட்டம் தேவை இல்லை. தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த வல்லரசு கொண்ட இயக்கம் அதிமுக" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:"அதிமுகவை அழிக்க கைக்கூலியாக இருக்கிறார் ஈபிஎஸ்" - நாஞ்சில் கோலப்பன் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details