தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை! - சென்னை பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய (ஜுன் 20) விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

பெட்ரோல்  டீசல் விலையில் மாற்றம் இல்லை  chennai news  chennai latest news  petrol diseal rate  சென்னை பெட்ரோல், டீசல் விலை  சென்னை செய்திகள்
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

By

Published : Jun 21, 2021, 8:27 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக் காரணமாக, மக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்துவருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக விலையேற்றம் குறித்தும், பெட்ரோல் விலையைக் குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று (ஜுன் 20) பெட்ரோல், லிட்டர் 98.40 ரூபாய்க்கும், டீசல் 92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து இன்றும் (ஜுன் 21) பெட்ரோல் விலையில் மாற்றமின்றி 98.40 ரூபாய்க்கும், டீசல் விலையில் மாற்றமின்றி 92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:இன்று கூடுகிறது 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்

ABOUT THE AUTHOR

...view details