தமிழ்நாட்டில் இப்போது இடைத்தேர்தல் இல்லை! - தலைமைத் தேர்தல் ஆணையம்
13:42 September 29
டெல்லி:தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாக பல்வேறு மாநில தலைமைச் செயலர்கள் கடிதம் எழுதியுள்ளதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடத்தப்படாது என தலைமைத் தேர்தல் ஆணையம் உறுதிபட கூறியுள்ளது.
இதையும் படிங்க...இபிஎஸ் உடனான கூட்டத்தை புறக்கணித்து ஓபிஎஸ் திடீர் ஆலோசனை!