தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹன்சிகாவின் 'மஹா' படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடித்த 'மஹா' திரைப்படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

MHC
MHC

By

Published : Jun 15, 2021, 7:06 PM IST

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் 'மஹா' என்ற படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், தனக்குத் தெரியாமல் படத்தை முடித்து, ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாக கூறி, படத்தை வெளியிட தடை கோரி இயக்குநர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், "கதைப்படி விமான பணிப்பெண்ணாக இருக்கும் கதாநாயகி ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. அதை கதாநாயகி கண்டுபிடிப்பது தான் கதை. இந்த கதைக்கு தேவையான காட்சிகளை எடுக்காமல் எனது உதவி இயக்குநரை வைத்து படமாக்கி, எனக்குத் தெரியாமல் படத்தை எடிட் செய்து, பின்னணி குரல் பதிவு செய்து படத்த வெளியிட முயற்சி செய்கின்றனர்.

படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், எட்டு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ”'மஹா' திரைப்படத்தை ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. படத்தின் இயக்குநருக்கு ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி வழங்கவேண்டிய தொகையைக் கொடுத்து அதற்கான ரசீதை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஜூன் 26 ஆம் தேதி ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details