மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்களில் மட்டுமே விளம்பர பலகைகள் வைக்கும் வகையில், தமிழ்நாடு மாநகராட்சிகள் சட்டத்தில் 2018ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, 2019 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வரும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதனை எதிர்த்து சென்னை ஹோர்டிங்ஸ் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குகளைத் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தனியார் நிலங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்குத் தடைவிதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டத்திருத்தம் தங்கள் தொழில் உரிமையை பாதிப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. காளான போல பெருகிவரும் விளம்பரப் பலகைகளைக் கட்டுப்படுத்துவதற்கு பொது நலனை கருத்தில்கொண்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.