தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’நெக்ஸ்ட் தேர்வில் உடன்பாடில்லை’- அமைச்சர் பேச்சு! - next exam

சென்னை: நெக்ஸ்ட் தேர்வில் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை என்றும், அதற்கான பிரிட்ஜ் கோர்ஸ் வேண்டாம் எனவும் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

medical minister

By

Published : Aug 17, 2019, 4:14 AM IST

இந்திய குழந்தை மருத்துவர் அகாடமியின் தமிழக பிரிவின் 44ஆவது வருடாந்திர மாநாடு மூன்று நாட்கள் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்காளிலிருந்தும் 1300க்கும் மேற்பட்ட குழந்தை சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர். பச்சிளம் குழந்தை முதல் வளர் இளம்பருவத்தினர் வரை அனைத்து நிலைகளில் உள்ள குழந்தைகளை தாக்கும் நோய்கள் பற்றியும், நோய் தடுப்பு பற்றியும் தாங்கள் சந்தித்த நோயின் தாக்கங்கள் மற்றும் சிகிச்சை முறை குறித்தும் மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், அரசு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் சாதனை புரிந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் அவர், நோய்களை தடுப்பூசி மூலம் குறைப்பதில் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது. வரும் காலத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் இன்னும் குறையும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நெக்ஸ்ட் தேர்வில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை. பிரிட்ஜ் கோர்ஸ் வேண்டாம் என தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details