தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிதிவண்டி திருட்டு குறித்த புகார் - வேதனையில் சாமானியன்!

மிதிவண்டி திருடப்பட்டது குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வருவதாக பறிகொடுத்தவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.

cycle theft
cycle theft

By

Published : Jul 31, 2021, 5:31 PM IST

சென்னை: நந்தனத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மெய்யப்பன்(47). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர், சமீபத்தில் உடற்பயிற்சிக்காக ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள மிதிவண்டி ஒன்றை வாங்கியுள்ளார்

இந்த மாதம் 1ஆம் தேதி இரவு மிதிவண்டியை தனது வீட்டிற்கு முன்பு நிறுத்தி உள்ளார். மறுநாள் அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதற்காக மிதிவண்டியை எடுக்க சென்ற போது, அங்கு மிதிவண்டியைக் காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அடையாளம் தெரியாத நபர், சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக கருப்பையா சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், காவல்துறையினர் அலட்சியம் காட்டி அழைக்கழிப்பதாகவும் கருப்பையா தெரிவித்துள்ளார்.

சைக்கிளைத் திருடும் அடையாளம் தெரியாத நபர்

நமது பொருட்களை நாமே பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளித்தால் அவர்கள் சாமானியர்களுக்கு செவி சாய்ப்பதில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஏழு வீடுகளில் தொடர் கொள்ளை: வெளியான சிசிடிவி

ABOUT THE AUTHOR

...view details