தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்.எல்.சி விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

நிலம் தந்த குடும்பத்தினருக்கு என்.எல்.சி பணிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 5, 2022, 5:04 PM IST

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்திடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும்.

கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, தான் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டதை வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டுமென முதலமைச்சர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ் மாெழி திறனறிவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ. 1500: வரும் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

ABOUT THE AUTHOR

...view details