தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மராட்டியத்தில் சிக்கியுள்ள தமிழர்களை ஊருக்கு அனுப்புங்கள்' - சீமான் - தமிழர்களை ஊருக்கு அனுப்புங்கள் - சீமான்

சென்னை: மராட்டியத்தில் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சிக்குண்டிருக்கும் தமிழர்களைத் தமிழ்நாடு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

seeman
seeman

By

Published : May 11, 2020, 8:47 PM IST

மராட்டிய வாழ் புலம்பெயர் தமிழர்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மராட்டியத்தில் கரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பு அபரிவிதமாகியுள்ள நிலையில், ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப் பகுதியாகத் திகழும் தாராவி மக்களின் வாழ்நிலை பெருங்கவலையைத் தருகிறது.

தாராவியில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 859ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆகவும் இருப்பது, அங்கு வாழும் அடித்தட்டு உழைக்கும் மக்களிடையே பெருத்த அச்சத்தையும் உருவாக்கியிருக்கிறது.

சராசரியாக ஒரு கழிப்பிடத்தை 400 பேருக்கும் மேல் பயன்படுத்துகிற நிலையிலுள்ள தாராவியில், நோய்த்தொற்று பரவலைத் தடுக்க மிகுந்த முன்னேற்பாடுகளும், அதிதீவிர நடவடிக்கைகளும் அவசியமாகிறது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களாகச்சென்று, நோய்த் தொற்றுப் பரவலால் மராட்டியத்தில் சிக்குண்டு தாய்நிலம் திரும்ப முடியாது தவித்து வரும் தமிழர்களை உடனடியாகத் தமிழ்நாட்டுக்குத் திருப்பியனுப்ப வேண்டியது பேரவசியமாகிறது.

எனவே, புலம்பெயர் தொழிலாளர்களாக மராட்டியத்திலுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும், தாராவியிலுள்ள அடித்தட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக மராட்டிய மாநில அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுக்களின் பணிகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details