வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டது.
நிவர் புயல் நேற்று (நவ.24) மாலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே இன்று (நவ.25) மாலை தீவிர புயலாகக் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.