தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவர் புயல்: பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகர காவல் ஆணையர்! - வெள்ளம் பாதித்த பகுதி

சென்னை: நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பாதித்த பகுதிகளை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று (நவம்பர் 26) நேரில் ஆய்வு மேற்கொண்டார்

nivar-storm-metropolitan-police-commissioner-inspects-the-damage
nivar-storm-metropolitan-police-commissioner-inspects-the-damage

By

Published : Nov 26, 2020, 9:36 PM IST

நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலின் உத்தரவின்படி, காவல்துறையினர் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியிலும், சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாம்பரம் மற்றும் முடிச்சூர் ஏரி பகுதிகளுக்கு சென்று தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி மற்றும் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை சென்னை மாநகர காவல் ஆணையர் நேரில் பார்வையிட்டார்.

மேலும் மழைநீரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதனிடையே, வெள்ள பாதிப்பால் தாம்பரம் அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, உணவு, குடிநீர் ஆகியவற்றையும் வழங்கினார்.

இதையும் படிங்க:விலை வீழ்ச்சியால் வாசமிழந்த கொத்தமல்லிச ஆற்றில் கொட்டும் அவலம்

ABOUT THE AUTHOR

...view details