தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவர் புயல்: சிறப்பு ரயில்கள் ரத்து! - southern railway region

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையிலிருந்து மங்களூரு, திருவனந்தபுரம், ஆலப்புழா, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று (நவ.25) இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்துசெய்யப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

special train
special train

By

Published : Nov 25, 2020, 8:08 PM IST

அதன் விவரம் கீழ்வருமாறு:

1) சென்னை - மங்களூரு (வண்டி எண் -02601)

2)சென்னை - திருவனந்தபுரம் (வண்டி எண் -02623)

3) சென்னை - ஆலப்புழா (வண்டி எண் -02639)

4) சென்னை - மேட்டுப்பாளையம் (வண்டி எண் -02671)

5) சென்னை - கோயம்புத்தூர் (வண்டி எண் -02673)

அதேபோன்று மறு மார்க்கத்திலிருந்து நாளை (நவ.26) சென்னை வரவேண்டிய சிறப்பு ரயில்கள் ரத்துசெய்யப்படுகின்றன.

1) திருவனந்தபுரம் - சென்னை (வண்டி எண் -02624)

2) மேட்டுப்பாளையம் - சென்னை (வண்டி எண் -02672)

கீழ்காணும் சிறப்பு விரைவு ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பதிலாக பெரம்பூர் வரை மட்டுமே இன்று (நவ.25) இயக்கப்படுகிறது.

சிறப்பு விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்:

1) மும்பை லோக்மான்ய திலக் - சென்னை (வண்டி எண் - 02163)

2) பெங்களூரு - சென்னை ஏசி டபுள் டக்கர் (வண்டி எண் - 06076)

3) கோயம்புத்தூர் - சென்னை (வண்டி எண் - 06028)

4) கோயம்புத்தூர் - சென்னை (வண்டி எண் - 02676)

இன்று (நவ.25) இரவு 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும் வண்டி எண் - 02512 திருவனந்தபுரம் - கோராக்பூர் சிறப்பு விரைவு ரயில் சென்னை சென்ட்ரலுக்குப் பதிலாக பெரம்பூர் ரயில் நிலையம் வழியாகத் திருப்பிவிடப்படுகிறது.

இதையும் படிங்க:#LiveUpdates தீவிரமடையும் நிவர் புயல் - தகவல்கள் உடனுக்குடன்...

ABOUT THE AUTHOR

...view details