தமிழ்நாடு

tamil nadu

நிவர் புயல் பாதிப்பு: நிவாரண உதவி வழங்கிய ஸ்டாலின்

By

Published : Nov 26, 2020, 3:43 PM IST

சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

Dmk leader stalin
Dmk leader stalin

நிவர் புயலால் சென்னையில் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

வடசென்னை வட கிழக்கு மாவட்டம் சார்பாக ராயபுரம் சீர்காழி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு போர்வை, உணவு பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கினார். வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

நிவாரண உதவி வழங்கிய ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details