வங்கக் கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி 21அடியை கடந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாகும்.