தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் நிதி கட்காரி! - 'womennovator

சென்னை: பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.

women innovator event Chennai

By

Published : Sep 28, 2019, 11:34 PM IST

பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய சிறு குறு நிறுவன அமைச்சகம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 'womennovator' நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து மற்றும் சிறு, குறு நிறுவன அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.


நிகழ்ச்சியில் பேசிய அவர், "தற்போது நாடு சந்தித்துவரும் பொருளாதார மந்த நிலை, உலக அளவில் நிலவும் பொருளாதார சூழலாலும், உற்பத்தி மற்றும் தேவைக்கு இடையே உள்ள வித்தியாசத்தாலும் ஏற்பட்டுள்ளது. சிறு குறு, நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

குறிப்பாக, பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. அதைப்போல் அலிபாபா, அமேசான் போல, ஏராளமான சிறு குறு நிறுவனங்கள் தங்களது பொருட்களை விற்பனைசெய்ய மத்திய அரசு ஒரு விற்பனை வர்த்தக இணைய தளத்தை தொடங்க உள்ளது.

இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார். இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் யுத்தம் -கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details