இந்தியாவில் பல வழக்குகளில் தேடப்படும் சாமியாரான நித்தியானந்தா தற்போது, நாட்டிலிருந்து வெளியேறி தனி தீவில் வசித்து வருவது அனைவரும் அறிந்தது தான். தான் வசிக்கும் இடத்தை கைலாசா என அழைத்துக் கொள்ளும் நித்தியானந்தா அங்கிருந்தவாறே தனது சீடர்களுக்கு இணையம் மூலம் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நித்யானந்தாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் அவர் இறந்துவிட்டதாகவும் சில தகவல்கள் கசிய விடப்பட்டன. இந்த தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
என்ன ஆச்சு நித்தியானந்தாவுக்கு..? இதில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி தான் இன்னும் இறக்கவில்லை ஆனால் சமாதியில் இருக்கிறேன் என தெளிவாக குழப்பியிருக்கிறார் நித்தியானந்தா. மேலும் படுக்கையில் சாய்ந்தவாறு சோர்வான தோற்றத்தில் நித்தியானந்தா இருக்கும் புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தன்னைப்பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு தான் சொல்லிக் கொள்ள விரும்புவது, தான் எங்கும் சென்றுவிடவில்லை அல்லது சாகவும் இல்லை, சமாதியில் மட்டுமே இருக்கிறேன் என கூறியிருக்கும் நித்தியானந்தா, சரியாக பேசுவதற்கும் பக்தர்களுக்கு சத்சங்க உரை நிகழ்த்துவதற்கும் இன்னும் நாட்களாகும் என குறிப்பிட்டுள்ளார்.
என்ன ஆச்சு நித்தியானந்தாவுக்கு..? தன்னால் மனிதர்களை முழுமையாக அடையாளம் காண முடிவதில்லை என்றும், பெயர்கள், இடங்கள் உள்ளிட்டவையும் நினைவில் இல்லை என நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார். இன்னும் தான் மருத்துவ சிகிச்சையிலிருந்து முழுமையாக மீளவில்லை என கூறும் நித்தியானந்தா 27 மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்.
நித்தியானந்தா கைப்பட எழுதியதாக கூறப்படும் ஒரு தாளின் புகைப்படமும் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் மே 11ம் தேதி குறிப்பிடப்பட்டு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என எழுதப்பட்டுள்ளது.
என்ன ஆச்சு நித்தியானந்தாவுக்கு..? நித்தியானந்தாவின் கைலாசா அதிகாரப்பூர்வ பக்கத்தில் நாள்தோறும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்படும் நிலையில் அவற்றில் பெரும்பாலானவை முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுபவை என கூறப்படுகின்றன. கைலாசாவில் கடுமையான நிதி நெருக்கடி இருப்பதாகவும் சிலர் கூறும் நிலையில், நித்தியானந்தாவின் உடல் நிலை குறித்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.