தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நலத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட நிர்பயா நிதி சென்னை உள்பட எட்டு நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிர்பயா நிதிக்காக ரூ.6.4 கோடி: மானிய கோரிக்கையில் தகவல் - நிர்பயா
சென்னை: நிர்பயா நிதிக்காக 2019 -20ஆம் ஆண்டில் பெறப்பட்டுள்ளது என சமூக நலத் துறை மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மூலம் காவல் துறை, சென்னை மாநகர போக்குவரத்துத் துறை, சமூக நலத்துறை மூலம் செயல்படுத்த 12 திட்டங்களுக்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு ஒப்பளிப்பு பெறப்பட்டுள்ளது.
இந்த நிதி 60:40 என்ற விகிதத்தில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் செலவினம் மேற்கொள்ளப்படுகிறது. சமூக நலத்துறை மூலம் மகளிர் உதவி எண் சேவையை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் 12.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது 2019 - 20 ஆண்டுக்கு 6.48 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது என்று சமூக நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ளது.
TAGGED:
நிர்பயா