சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நான்காவது சர்வதேச வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டினை மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
உலகம் முழுவதும் உள்ள 50 உலகளாவிய முதலீட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டாளர்களின் வணிக வாய்ப்புகள் மேம்படுத்த இந்த நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் முனைவோர்களின் சாதனைகளையும் வணிக நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.
4ஆவது சர்வதேச வர்த்தக மாநாடு இந்நிகழ்வில், கலந்துகொண்ட சர்வதேச வர்த்தக மாநாடு தலைவர் எம்.சி. பழனியப்பன், தொழில்முனைவோர் உணர்வை ஊக்குவிப்பதற்காக ஒரு புதிய முயற்சியை பல ஆண்டுகளாக தாங்கள் செய்து வருவதாகவும், பலதரப்பட்ட நபர்கள் வணிகங்களை மேற்கொள்வதற்கு இந்திய சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது ஊக்கம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் மூலம் பல நபர்கள் இளைஞர்களுடன் வணிக சமூகத்துடன் கலந்துரையாடுவதைத் தான் வரவேற்பதாகவும், மேலும் இந்த மாநாட்டின் மூலம் ஏராளாமான விஷயங்கள் இளம் பங்கேற்பாளர்கள் தொழில்முனைவோரைப் போல சிந்திக்கத் தொடங்கி, சமூகத்தில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துவார்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.