சென்னை: துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்குத் தங்கம் கடத்தப்படுப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சோதனையில் சென்னை விமான நிலையம் வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் பயணித்த 9 பேர் சிக்கினர்.
சுற்றுலாப் பயணிகள்போல் துபாய் சென்றவர்கள் அங்கிருந்து தங்கம் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினர். 9 பேரின் உடமைகளில் இருந்து 5 கிலோ 267 கிராம் தங்கத்தை கைப்பற்றிதாகவும், அதன் மதிப்பு ஏறத்தாழ இரண்டரை கோடி ரூபாய் வரை இருக்கும் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.