தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் 9 வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை - பார் கவுன்சில் உத்தரவு! - Chennai News

தமிழ்நாடு முழுவதும் 9 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 9 வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை - பார் கவுன்சில் உத்தரவு!
தமிழ்நாடு முழுவதும் 9 வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை - பார் கவுன்சில் உத்தரவு!

By

Published : Dec 6, 2022, 2:18 PM IST

சென்னை:இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பிறப்பித்துள்ள உத்தரவில், “தனது கட்சிக்காரரிடம் பெருந்தொகையை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்ட நந்தகோபாலன், குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய திருச்சியைச் சேர்ந்த பிரபு, தீவிர குற்றச்சாட்டின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான நாகர்கோவிலை சேர்ந்த ராஜ கணபதி ஆகியோர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது.

மேலும் ஒன்பது லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பணி நியமன உத்தரவு வழங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கடலூரைச் சேர்ந்த பெருமாள், உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் பொன் பாண்டியன் ஆகியோர் வழக்கறிஞர் பணி செய்ய தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல் திருவாரூர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய முத்தாட்சி, போக்சோ வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ரோஜா ராம்குமார் மற்றும் மதுரையைச் சேர்ந்த அருண்பாண்டியன் ஆகியோருக்கும் வழக்கறிஞர் பணி செய்ய தடை விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:போலி பணி அனுபவ சான்று கொடுத்த தேர்வு... மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details