சென்னை: முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, கரோனா விதிகளை மீறி, மத்திய வேளாண்மை சட்டங்களுக்கு எதிராகவும், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறைகேட்டை கண்டித்தும், மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், ஸ்டாலின் கைதைக் கண்டித்தும் போராட்டங்களில் ஈடுபட்டதாக, தற்போதைய அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக அரியலூரில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் சிவசங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, உள்நோக்கத்துடன் தன்னை துன்புறுத்தும் நோக்கில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தரப்பில் வாதத்தை முன் வைத்தனர்.