தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது சட்டவிரோதம்' - நீதிமன்றம் கண்டனம்

சென்னை: சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்காத பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக  பதிவு செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : May 17, 2019, 11:07 PM IST

Updated : May 17, 2019, 11:30 PM IST

தமிழ்நாட்டில் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் தனியார் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு அரசிடமிருந்து தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2014ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து 75 குடிநீர் (கேன் வாட்டர்) நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கி தமிழக மக்களின் அவல நிலையை எடுத்துரைத்தார்.

தண்ணீர் பிரச்னை

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும், ‘தண்ணீர் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாக அவதிப்படுவதாகவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று செய்திகள் வெளிவந்தன. செய்தியின் எதிரொலியாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தலைவர், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மண்டல இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆகியோர் மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தனியார் நிலத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏரி, குளம், விவசாய நிலம், தனியார் நிலம் ஆகியவற்றில் இருந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதற்கு பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற 20-ஆம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Last Updated : May 17, 2019, 11:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details